உத்தரப்பிரதேச மாநிலம் பாராபங்கி மாவட்டம் தால்குர்து கிராமத்தில் உறவினர் வீட்டில் விருந்து சாப்பிட்ட 9 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக உயிரிழந்தவர்களின் உறவினர்கள், கிராமமக்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்விரோதம் இருந்ததா என்றும், உணவில் விஷம் கலந்துள்ளதா என்பது குறித்தும் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். விசாரணைக்குப் பின்னரே காரணம் தெரியவரும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.