கன்னியாகுமரி மாவட்டம் இணையம்புத்தன்துறை கிராமத்தில், புனித அந்தோனியார் ஆலய விழா நடைபெற்று வருகிறது. இதற்காக, தேர்பவனிக்கான அலங்கார பணி நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது, சிலர் இரும்பு ஏணியை தூக்கிக் கொண்டு சென்றனர். அந்த ஏணி எதிர்பாராத விதமாக மின்கம்பம் மீது உரசியது.
இதில், ஏணியில் மின்சாரம் பாய்ந்தது. அப்போது, ஏணியை தூக்கிச் சென்ற 4 பேர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில், சம்பவ இடத்திலேயே நான்கு பேரும் உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு போலீசார் அவர்களின் உடல்களை கைப்பற்றி குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் இணையம்புத்தன்துறை கிராம மக்களை பெரும் சோத்துக்குள்ளாக்கியது.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.