Advertisement

நித்திரவிளையில் தொடர் திருட்டு : திருவனந்தபுரத்தில் சிக்கிய கயவர்கள்

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியிலுள்ள வீடுகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்தவர்களை கைது செய்ய கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து, மார்த்தாண்டம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் நல்லசிவம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் தொடர் திருட்டில் ஈடுபட்ட கொள்ளையர்களை தேடி வந்தனர்.

தீவிர தேடல் வேட்டையில் குற்றவாளிகள் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த ரவீந்திரநாத் என்பவரது மகன் ஸ்ரீகாந்த்(39) மற்றும் காலகோட்டம் பகுதியை சேர்ந்த சுனில் என்பவரது மகன் சுஜித்(21) என்பது தெரிய வந்தது.

தொடர்ந்து, போலீசார் இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்த திருட்டு நகைகள் பறிமுதல் செய்தனர். இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் படிக்க
Private-vans-speeding
கன்னியாகுமரி : மார்த்தாண்டம்- கடையல் பகுதியில்  தனியார் வேன்கள் தாறுமாறு  வேகம் 
DMK-holds-water-and-butter-stall-in-Kulachichal
கொளுத்தும் கோடை வெயில் : குளைச்சலில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் 
Matar-Sangam-protests-against-sexual-assaults
கன்னியாகுமரி : செண்பகராமன் புதூரில் பாலியல் வன்கொடுமைகளை எதிர்த்து மாதர் சங்கம் போராட்டம்
railway-exam-cancel-in-last-minute
அலைக்கழிக்கப்படும் தமிழக மாணவர்கள் : ரயில்வே துறைக்கு எழுந்த கண்டனம்
thengai-pattinam-fishing-horbour-issue
தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் கன்னியாகுமரி கலெக்டர் ஆய்வு
murugan-temple-function-in-kanyakumari
கன்னியாகுமரி: வேளிமலை குமாரகோவிலில் குறவர் படுகளம் நிகழ்ச்சி
sparrows-day-in-kanyakumari
கன்னியாகுமரி: தோவாளையில் உலக சிட்டுக்குருவி தினம்
Thiruvalluvar-statue-s-silver-jubilee-memorial-gate
கன்னியாகுமரி : திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நினைவு தோரணவாயில் அமைக்கும் பணி தொடக்கம் 
Kanyakumari-Wife-hit-on-the-head-with-a-hammer
கன்னியாகுமரி:  மனைவிக்கு சுத்தியலால் மண்டையில் அடி 
Near-Iranial-Conspiracy-to-overturn-Parasuram-Express-train
இரணியல் அருகே : பரசுராம் எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி