கண்ணகி எப்படி பகவதி அம்மனாக மாறினார்? லட்சக்கணக்கான பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு

தனது கணவர் கோவலன் இறந்த பிறகு மதுரையை எரித்து விட்டு கண்ணகி கடுங்கோபத்துடன் கொடுங்கலூர் சென்று வானுலகம் அடையும்முன் திருவனந்தபுரம் கிள்ளி ஆற்றின் கரையில் ஓய்வெடுத்த இடம் தான் ஆற்றுக்கால் என கூறப்படுகிறது. இங்கு கண்ணகியின் கோபத்தை தணிக்க பெண்கள் பொங்கலிட்டு வழிபட்டதாக ஐதீகம். இங்கு, பகவதி அம்மன் என்ற பெயரில் கண்ணகிக்கு கோயில் கட்டி காலங்க காலமாக வழிபட்டு வருகின்றனர் . ஆண்டு தோறும் மாசி ( மலையாள மாதமான கும்ப மாதம் ) மாதம் திருவிழா வையொட்டி பெண்கள் பொங்கல் வழிபாடு நடைபெறுவது வழக்கம். மாசி மாதத்தில் பூரம் நட்சத்திர நாளில் பொங்கல் வழிபாடு நடைபெறுகிறது. இந்த பொங்கல் விழாவில் கலந்துகொள்ள லட்சக்கணக்கான பெண்கள் திரள்வாட்ரகள். சுமார் 20 கிலோமீட்டர் சுற்றளவில் பொங்கல் வைக்கப்படுகிறது. பல லட்சம் பெண்கள் குவிந்து வழிபாடு செய்யும் இந்த ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் கடந்த 1997 ஆம் ஆண்டு பதினைந்து லட்சம் பெண்கள் மற்றும் 2009 ஆம் ஆண்டு 25 லட்சம் பெண்கள் பொங்கலிட்டு உலக சாதனையை ஏற்படுத்தியுள்ளனர். இந்த ஆண்டுக்கான பொங்கல் விழா கடந்த மார்ச் 5 ஆம் தேதி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. நாளை 14 ஆம் தேதி திருவிழா நிறைவு பெறும்.

ஆற்றுகால் பொங்கலையை முன்னிட்டு இன்று திருவனந்தபுரம் மாவட்டத்திற்கு கேரளா அரசு விடுமுறை அறிவித்துள்ளது. கேரளா மற்றும் தமிழகத்தில் இருந்தும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பொங்கலிட வரும் பெண்களுக்காக சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்படுகின்றன. சுமார் 3000 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காலை 10.15 மணிக்கு கோயில் தந்திரி தீபம் எடுத்து கொடுக்க தலைமை பூசாரி முதலில் பண்டார அடுப்பில் தீயை ற்ற வைத்து பொங்கல் வழிபாடை துவங்கி வைத்தார் . தொடர்ந்து, அனைத்து அடுப்புகளிலும் நெருப்பு பற்ற வைக்கப்பட்டது .திருவனத்தபுரம் நகரப்பகுதி முழுவதுமாக லட்சகணக்கான பெண்கள் பொங்கல் வழிபாடு நடத்தியதால் நகர் பகுதி முழுவதும் புகைமண்டலமாக காணபட்டது . மதியம் 1.15 மணிக்கு நிவேத்திய பூஜையுடன் பொங்கல் வழிபாடு நிறைவடையும். அப்போது குட்டி விமானம் மூலம் பொங்கல் வழிபாட்டில் ஈடுபடும் பெண்கள் மீது அர்ச்சனை பூக்கள் தூவப்படுகின்றது . ஆலய நிர்வாகம், திருவனந்தபுரம் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் சார்பாக பெண்களுக்கு இலவசமாக குடிநீர் மற்றும் உணவு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சினிமா நட்சத்திரங்கள் மற்றும் சின்னதிரை நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்களும் பொங்கலிட்டு வழிபாடு செலுத்தினர். கோயிலின் முன்புறம் அமைக்க பட்டுள்ள பச்சை பந்தலில் தோற்றப்பாட்டு என்று அழைக்கப்படும் கண்ணகி பாட்டு நடைபெற்றது. இங்கு பொங்கலிட்டு அம்மனை வழிபட்டால் குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும் மற்றும் தொழில் வளம் பெறும், நினைத்த காரியம் நிறைவேறும் என்பது நம்பிக்கை .