கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகேயுள்ள மரியகிரியில் மலங்கரை கத்தோலிக்க கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியின் என்சிசி மாணவர்கள் சார்பில் போதை ஒழிப்பு பேரணி நேற்று நடைபெற்றது.
பேரணியை பத்மநாபபுரம் சார் ஆட்சியர் வினய் குமார் மீனா கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணிக்கு கல்லூரி தாளாளர் அருள்தாஸ் தலைமை வகிக்க, முதல்வர் பீட்டர் அமரதாஸ் முன்னிலை வகித்தார். முன்னதாக, பத்மநாபபுரம் சார் ஆட்சியர் வினய்குமார் மீனா என்சிசி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். மேலும், நிகழ்ச்சியில் மாணவர்கள் போதை பயன்பாட்டிற்கு எதிராக உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பேரணியில், மாணவர்கள் போதை பழக்கத்தின் தீமைகள் குறித்து மக்களுக்கு எடுத்துரைத்தனர்.