கன்னியாகுமரி அருகே இரவிபுதூர் அருகே கால்வாயில் பள்ளி வாகனம் கவிழ்ந்ததில் 3 மாணவர்கள் காயமடைந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நல்லூர் அருகேயுள்ள இரவிபுதூர் சாலையில் தனியார் பள்ளி வாகனம் மாணவர்களுடன் சென்று கொண்டிருந்தது. அந்த பகுதியில் ஒரு வளைவில் திரும்பும் போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகிலுள்ள ஓடையில் கவிழ்ந்தது. இதனால், வாகனத்தில் இருந்த மாணவர்கள் அலறினர். இந்த விபத்தில் மூன்று மாணவர்களுக்கு லேசானம் காயம் ஏற்பட்டது. ஆசிரியை ஒருவருக்கு கை முறிவு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து, மற்றொரு பள்ளி வாகனம் வரவழைக்கப்பட்டு குழந்தைகள் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்தால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.