கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே கஞ்சா போதையில் மோட்டார் சைக்கிளை அதிவேகமாக ஓட்டி சென்று சாலையில் நடந்து செல்பவர்கள் மற்றும் படிக்க செல்லும் குழந்தைகளை அச்சுறுத்தும் விதத்தில் இளைஞர் ஒருவர் செயல்பட்டு வருகிறார்.
அந்த இளைஞரின் வீட்டின் எதிரே அமைந்துள்ள டியூஷன் சென்ட்ரலில் படிக்கும் குழந்தைகளிடம் தகாத முறையில் செய்கைகளை காட்டியும் சேட்டையில் ஈடுபட்டு வருகிறார். இந்த போதை ஆசாமியை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.