டெல்லியிலுள்ள மத்திய தொழில் பாதுகாப்புப்படையினர் சார்பாக சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில், கடந்த மார்ச் 7 ஆம் தேதி இந்திய மேற்கு கடற்கரை மற்றும் கிழக்கு கடற்கரை வழியாக சைக்கிள் பேரணி தொடங்கி நடைபெற்று வருகிறது .
இதன் இறுதி சுற்று மார்ச் 31 ஆம் தேதி காலை தூத்துக்குடியில் தொடங்கி மாலையில் கன்னியாகுமரியில் முடிவடைகிறது. சைக்கிள் பேரணியின் நிறைவு விழாவில் பங்கேற்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கன்னியாகுமரி வருகிறார். இதையடுத்து, மத்திய தொழில் பாதுகாப்பு படை ஐ. ஜி எஸ்.ஆர்.சரவணன் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகை மற்றும் ஹெலிகாப்டர் இறங்கும் தளம் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.