நாகர்கோவில் : மாநகராட்சி பகுதியில் மேயர் மகேஷ் திடீர் ஆய்வு

நாகர்கோவில் மாநகராட்சி 24-வது வார்டுக்குட்பட்ட நாகராஜா திடல் முதல் பேரறிஞர் அண்ணா பேருந்துநிலையம் வரை மேயர் மகேஷ், மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

நாகராஜா திடலில் உள்ள ஆக்கிரமிப்புனகளை அகற்றி , பொதுமககள் பயன்படும் வகையில் நடைபாதை அமைக்கவும் சாலையோர நாடைபாதைகளில் தனியார் நிறுவனங்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றவும் உத்தரவிடப்பட்டது. மேலும், இருசக்கர வாகனங்களை அங்கே நிறுத்த தடைவிதிக்கவும் , ஓடைகளில் காணப்படும் கழிவுப்பொருட்களை அகற்றிடவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. பேரறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தினுள் பயணிகள் காத்திருக்கும் பகுதியை சீரமைக்கவும், நவீன கழிவறையினை சுகாதாரமாக வைத்திடவும் மாநகராட்சி அதிகாரிகளிடம் மேயரும் ஆணையரும் அறிறுத்தினார்கள். ஆய்வின் போது, உடன் உதவி செயற்பொறியாளர் ரகு ராம், மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.