மார்த்தாண்டம் பஸ்சில் பர்ஸ் திருடிய தூத்துக்குடி பெண்கள் கைது

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பேருந்து நிலையத்திலிருந்து கீதாதேவி என்பவர் தன் வீட்டிற்கு செல்வதற்காக பேருந்தில் ஏறி பயணித்துள்ளார். அதே பேருந்தில் பயணம் செய்த தூத்துக்குடி அண்ணா நகரைச் சேர்ந்த அஞ்சலி (29), பவானி (27) ஆகிய இருவரும் இருந்துள்ளனர்.

இவர்கள், அருகில் இருந்த கீதா தேவியின் பர்ஸை திருடியுள்ளனர். இதை பார்த்து அருகில் இருந்த மற்றொரு பயணி கத்தி கூச்சலிட்டார். இதையடுத்து, ஓட்டுநர் பேருந்தை நிறுத்தினார். நடத்துனர் கூச்சலிட்ட பெண்ணிடம் விசாரிக்கவே சீதாதேவியிடம் அந்த பெண்கள் பர்சை திருடிது குறித்து தெரிவித்தார். இதையடுத்து, திருட்டில் ஈடுபட்ட தூத்துக்குடி பெண்கள் இருவரும் மார்த்தாண்டம் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர்.