கன்னியாகுமரி : இரவில் டீ குடித்த இளைஞர்கள்... திடீரென்று வந்த எஸ்.பி

sp-advice-youngsters-in-kanyakumari

கன்னியாகுமரி அருகே குமாரகோவில் ஐயங்கார் பேக்கரியில் நேற்றிரவு சில இளைஞர்கள் டீ குடித்து கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி ஸ்டாலின், டீ குடித்து கொண்டிருந்த இளைஞர்களிடம் விசாரணை நடத்தினர்.

இரவு நேரத்தில் தேவையின்றி கூட்டம் கூட தவிர்க்க வேண்டுமென்றும் இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கினார். அவர்கள் வைத்திருந்த இரு சக்கர வாகனங்களின் ஆவணங்களும் சரி பார்க்கப்பட்டது.

ஆவணங்கள் முறையாக இல்லாத இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்யவும் தக்கலை போலீசாருக்கு அவர் உத்தரவிட்டார்.