போலீஸ் துறைக்கு என தனி அமைச்சகம் வேண்டும் - நாகர்கோவிலில் போராட்டம்

காவல்துறைக்கு தனி அமைச்சகம் வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஓய்வு பெற்ற காவலர் நல சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


காவல்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற 70 வயது முதிர்ந்த ஓய்வூதியர்களுக்கு 10% கூடுதல் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும், ஓய்வு பெற்ற காவல் துறையினர் இறக்கும் போது வழங்கப்படும் ரூ.50 ஆயிரத்தை 2 லட்சமாக உயர்த்த வேண்டும். ஓய்வு பெற்ற காவல் துறையினருக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தில் கீழ் சிகிச்சை பெற உடனடியாக புகைப்படத்துடன் கூடிய காப்பீடு அட்டை வழங்க வேண்டும் . காவல்துறைக்கு என்று தனியாக அமைச்சர் வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்சங்களை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.