
கேரளாவில் இருந்து நாய்களை கடத்தி தமிழகத்தில் விட முயற்சித்த சம்பவம் தடுக்கப்பட்டுள்ளது .
கேரள மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு கொண்டு வந்த கழிவுகளை கொட்டிக் கொண்டிருந்தனர். முதலில் மருத்துவக்கழிவு, இறைச்சிக்கழிவுளை கொட்டினர். இதனால், எல்லை மாவட்டங்களான கோவை, கன்னியாகுமரி , நெல்லை, தென்காசி மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன.
இந்த நிலையில் எதற்குமே அடங்காத சேட்டன்கள் இப்போது, நாய்களை அங்கிருந்து கடத்தி வந்து தமிழகத்தில் விட முயற்சித்துள்ளனர். நாய்களை வேனில் ஏற்றி தடுப்பூசி போட கொண்டு போவதாக கூறி கன்னியாகுமரி மாவட்டம் கட்டச்சல் பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் விட்டு விட முயற்சித்துள்ளனர்.
இதை பார்த்த அந்த பகுதி மக்கள் வாகனத்தை சுற்றி வளைத்தனர். தொடர்ந்து, போலீசாருக்கு தகவல் கொடுத்ததையடுத்து, வாகனத்தில் இருந்தவர்களை பிடித்து சென்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இது போன்ற சம்பவங்களை தடுக்க தமிழக அதிகாரிகளுக்கு திறமை இல்லையா? என்று மக்கள் கேட்கின்றனர்.