
நாகர்கோவிலில் வருமான வரி சேவை மைய திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வருமான வரி முதன்மை ஆணையர் சஞ்சய் ராய், தலைமை ஆணையர் வசந்தன் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் நடிகர் வடிவேலு ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்
நடிகர் வடிவேலு செய்தியாளரிடம் பேசுகையில், ' அரசியல் கருத்து கூற விரும்பவில்லை. இது அதற்கான இடமும் இல்லை. வரி கட்டுவது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும். வரி கட்டுவதால் நாடும் நாட்டு மக்களும் முன்னேற்றம் அடைவார்கள்.
நான் நடித்த கேங்ஸ்டர் உள்ளிட்ட இரண்டு படங்கள் திரைக்கு வர தயாராகவுள்ளது. இந்த படங்களை குடும்பத்தோடு பார்த்து சிரிக்கலாம் . எனது வளர்ச்சிக்கு மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு. வாழ்க்கையில் தோல்வி என்பது சகஜம். திரைப்படங்களில் வெற்றி தோல்வி என்பது வந்து போகும். மக்களை சிரிக்கவும் சிந்திக்க வைக்கவும் வேண்டும் என்ற நோக்கத்தில் நடித்து வருகிறேன்.'
இவ்வாறு அவர் கூறினார்.