
கன்னியாகுமரியில் இருந்து இன்று காலை 5 மணிக்கு மங்களூர் செல்லும் பரசுராம் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு சென்றது. இரணியல் ரயில் நிலையம் அருகே ரயில், சென்றபோது தண்டவாளத்திற்கிடையே கற்கள் வைக்கப்பட்டிருப்பதை கண்ட லோகோ பைலட் உடனடியாக, ரயிலை உடனே நிறுத்தினார் . இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது . தொடர்ந்து, லோகோ பைலட் ரயில்வே உயர் அதிகாரிகளுக்கு இது குறித்து தகவல் தெரிவித்தார். அதிகாரிகள் அந்த பகுதிக்கு. விரைந்து சென்று தண்டவாளத்தில் இருந்த கற்களை எடுத்து அகற்றினர். பின்னர், ரயில் புறப்பட்டு சென்றது. இது குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.