
புதுக்கடை அருகே மாராயபுரம் பகுதி, தேரிவிளையை சேர்ந்தவர் ரமேஷ் (52). இவரது மனைவி ஜெனிபா (48). இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. கூலித் தொழிலாளியான ரமேசுக்கு குடிப்பழக்கம் உண்டு. இதனால், போதையில் மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்வது வழக்கம். நேற்று இரவு கணவனுக்கும் மனைவிக்கும் சண்டை ஏற்பட்டது. குடிபோதையில் இருந்த ரமேஷ், னைவியின் தலையில் சுற்றியலால் அடித்தார். இதில் படுகாயமடைந் அவரை வீட்டின் குளியல் அறையில் வைத்து பூட்டியுள்ளார். பின்னர், நேராக புதுக்கடை காவல் நிலையத்துக்கு நென்று விபரத்தை கூறி சரணடைந்தார்
புதுக்கடை போலீசார் உடனே சம்பவ இடத்துக்கு சென்று, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ஜெனிபாவை மீட்டு கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து, போலீசார் ரமேஷிடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.