
கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகை முன்பிருந்து காந்தி மண்டபம் செல்லும் சாலையில் ரூ. 1.45 கோடி மதிப்பீட்டில் அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நினைவு தோரணவாயில் அமைப்பதற்கான அடிக்கல்லை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி அடிக்கல் நாட்டினார்.
இதற்கான பணி தொடக்கவிழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கன்னியாகுமரி சிறப்புநிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், துணைத்தலைவர் ஜெனஸ் மைக்கேல், ஆர். பாண்டியராஜ் பேரூராட்சி உதவி செயற்பொறியாளர், ராஜ ரமேஷ் இளநிலை பொறியாளர் கன்னியாகுமரி பேரூராட்சி (தொகுப்பு), அரசு ஒப்பந்ததாரர் சந்திரகுமார், பேரூராட்சி சுகாதார அலுவலர் ஆர்.முருகன், பேரூராட்சி கவுன்சிலர்கள் ஆனிரோஸ் தாமஸ், டெல்பின் ஜேக்கப், ஆட்லின், இக்பால், மற்றும் திமுக நிர்வாகிகள் ப.மெல்வின், எஸ்.அன்பழகன், பி.ஆனந்த், பிரிட்டன், ஷ்யாம், ரூபின், வேலு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.