
தமிழகத்திலுள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவில்களில் ஆண்டு தோறும் முருக பெருமானுக்கு பங்குனி உத்திர திருவிழாவின் போது திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தக்கலை வேளிமலை குமாரகோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு இன்று (மார்ச் 21 ) முருக பெருமானுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது . இதையொட்டீ, வித்தியாசமான குறவர் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது .
இங்குள்ள மலையிலிருந்து வள்ளி தேவியுடன் முதியவர் வேடத்தில் முருக பெருமான் கோவிலை நோக்கி செல்வது போலவும், வள்ளி தேவியின் உறவினர்களான குறவர்கள் பல்வேறு வேடமணிந்து முருகனை தடுப்பதும் அவர்களுடன் முருக பெருமான் சண்டையிட்டு வெற்றி பெற்று இறுதியில் தனது உண்மை வடிவத்தை வெளிக்காட்டும் கதை நடித்து காட்டப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரகணக்கான பக்தர்கள் பங்கேற்று முருக பெருமானை தரிசித்து சென்றனர்.