
கன்னியாகுமரி மாவட்டம் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் 15 முதல் 17ஆம் தேதி வரை ஏற்பட்ட கள்ளக் கடலால் 75 மீட்டர் நீளமுள்ள பிரதான அலை தடுப்புசுவர் சேதமடைந்தது.
இந்தச் சுவரை சீரமைக்கும் பணிகள் மற்றும் முன்னேற்பாடு குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா, நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
உடனடியாக , சீரமைப்பு பணிகளை தொடங்கி, மீனவ மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆய்வில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.