கொளுத்தும் கோடை வெயில் : குளைச்சலில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல்

குளச்சலில் தி.மு.க அயலக அணி சார்பில் அமைக்கப்பட்ட கோடைக்கால நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. பொதுமக்களின் தாகம் தணிக்க சாலையோரங்களில் நீர் மோர் பந்தல்கள் திறக்கப்பட்டு வைருகிறது . அந்த வகையில் குளச்சலில் திமுக அயலக அணி சார்பில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை அயலக அணி மாநில துணைசெயலாளர் பாபு வினிபிரட் தலைமையில் நாகர்கோவில் மாநகராட்சி மேயரும் திமுக மாவட்ட செயலாளருமான மகேஷ் திறந்து வைத்தார். பின்னர், பொதுமக்களுக்கு தர்பூசணி ,ஆரஞ்சு பழம், மோர் போன்றவை வழங்கப்பட்டது.