கன்னியாகுமரி : மார்த்தாண்டம்- கடையல் பகுதியில் தனியார் வேன்கள் தாறுமாறு வேகம்

மார்த்தாண்டம் அருகே உரிய ஆவணங்கள் இல்லாமல் இயக்கப்பட்டு வரும் தனியார் வாகனங்கள் தாறுமாறு வேகத்தில் செல்வதால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம்- கடையல் வழித்தடத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் தனியார் வேன்கள். இயக்கப்பட்டு வருகின்றன . இந்த வேன்கள் பயணிகயைள ஏற்றி செல்வதற்காக ஒருவருக்கு ஒருவர் போட்டி போடுகின்றன. அதோடு, அதிவேகத்தில் அரசுப் பேருந்துகளை முந்தி சென்று பயணிகளை ஏற்றி செல்கின்றன. இதனால், அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன பயணிகளை ஏற்றிச் செல்வதற்கான உரிய ஆவணங்கள் இல்லாத வாகனங்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.