
கன்னியாகுமரி மாவட்டம் சாமியார் மடத்தை சேர்ந்தவர் விஜயேந்திர சிங்கன். மெக்கானிக்கான இவர், கடந்த 10-ம் தேதி. வீட்டின் அருகே இவர் தனது புல்லட் வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்க்கும் போது, புல்லட்டை காணவில்லை.
இது குறித்து மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில். போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், பைக் திருட்டில் ஈடுபட்ட கேரளாவை சேர்ந்த செல்சன் என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து பைக்கும் பறிமுதல் செய்யப்பட்டது. போலீசார் தொடர்ந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.