கன்னியாகுமரி : மக்களை மிரட்டும் வகையில் வாகனம் ஓட்டிய இளைஞர்கள் தட்டி தூக்கிய போலீசார்

கன்னியாகுமரியில் அதிக சத்தம் எழுப்பியபடி மக்களை மிரட்டும் வகையில் இளைஞர்கள் பைக்குகளை ஓட்டுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவுப்படி , துணை கண்காணிப்பாளர் மகேஷ் குமார் மேற்பார்வையில் கன்னியாகுமரி போக்குவரத்து காவல் ஆய்வாளர் . அருண், போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஜெயபிரகாஷ் மற்றும் போக்குவரத்து காவலர்கள் கன்னியாகுமரி பகுதியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, ஓட்டுநர் உரிமம் இல்லாமல் நம்பர் பிளேட் இல்லாமலும், அதிக ஒலி எழுப்பும் ஹார்ன் பொருத்திய பைக்குகளை ஓட்டியவர்கள் பிடித்தனர். ஆபத்தான முறையில் ஓட்டத்தட்ட 8 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.