கன்னியாகுமரி வனப்பகுதியில் பிளாஸ்டிக் பாட்டில்கள், நெகிழி அகற்றம்

கன்னியாகுமரி மாவட்ட வனச்சரகத்தில் யானைகள் நடமாட்டமுள்ள தொடலிக்காடு மற்றும் சீரோ பாயிண்ட் வனப்பகுதிகளில், பொதுமக்கள் போட்டு விட்டு சென்ற நெகிழி, பிளாஸ்டிக், மதுபான பாட்டில்கள் மற்றும் கண்ணாடி பொருட்களை வனத்துறையினர் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரி மாவட்ட வனத்துறை அதிகாரி பிரசாந்த் உத்தரவின் பேரில் களியல் வனச்சரக வன அதிகாரி முகைதீன் தலைமையில், இந்த பணி நடைபெற்றது.

வனத்துறையினருக்கு வனவிலங்கு & சுற்றுச்சூழல் பாதுகாப்பு அறக்கட்டளை அமைப்பு உறுப்பினர்களும் நெகிழியை அகற்ற உதவிக்கரமாக இருந்தனர். சேகரிக்கப்பட்ட குப்பைகள் குப்பை கிடங்குக்கு அனுப்பி வைக்கப்பட்டன.. வனப்பகுதிகளுக்கு செல்லும் போது நெகிழி உள்ளிட்டவற்றை அங்கு போடாமல் இருக்க வேண்டுமென வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.