கன்னியாகுமரி : உலக காசநோய் விழிப்புணர்வு பேரணி

உலக காசநோய் தினத்தை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை கல்லூரி முதல்வர் ஜோதி தீபம் ஏற்றி தொடங்கி வைத்தார். பேரணியில் மருத்துவர்கள், செவிலியர்கள் , சுகதாரத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பேரணி நடைபெற்றது. கன்னியாகுமரிமாவட்ட ஆட்சியர் அழகுமீனா, பேரணியின் நிறைவாக உரையாற்றினார்.