
நாகர்கோவில் லியாகத் ஹோட்டலில் மந்தி பிரியாணி சாப்பிட்ட பெரியவிளை கிராமத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 குழந்தைகள் 4பெண்கள் உட்பட 17-பேருக்கு வாந்தி மயக்கம் வயிற்று போக்கு ஏற்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே உள்ள பெரியவிளை கிராமத்தை சேர்ந்த அருள் என்பவர் சனிக்கிழமை மதியம் நாகர்கோவிலிலுள்ள லியாகத் ஹோட்டலில் மந்தி பிரியாணி மற்றும் சிக்கன் ஆர்டர் செய்துள்ளார். பின்னர், மந்தி பிரியாணி மற்றும் சிக்கனை வீட்டிற்கு கொண்டு சென்று குடும்பத்தினர் 20பேருடன் பகிர்ந்து சாப்பிட்டுள்ளனர். பிரியாணியை சாப்பிட்ட சாப்பிட்ட சில மணி நேரத்தில் 17 பேருக்கு வாந்தி மற்றும் வயிற்று போக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது .
இதனால், அருகிலுள்ள மருத்துவமனைக்கு சென்று முதல் கட்ட சிகிச்சை பெற்றுள்ளனர். ஆனால், வயிற்றுப் போக்கு நின்ற பாடில்லை. இதையடுத்து, 23 ம் தேதிமாலை 3 குழந்தைகள் 4 பெண்கள் உட்பட 17பேரும் குளச்சல் , நாகர்கோவிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் . இரண்டு குழந்தைகள் தீவிர சிகிட்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புகாரின் அடிப்படையில் மணவாளக்குறிச்சி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தகவல் அறிந்து மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் லியாகத் ஹோட்டலில் ஆய்வு மேற்கொண்டனர்.