கன்னியாகுமரி : உயரழுத்த மின் கம்பி அறுந்து விழுந்ததில் வீடுகளில் மின் சாதன பொருட்கள் எரிந்து சேதம்

current-issue-in-kanyakumari

கன்னியாகுமரி அருகேயுள்ள கிராமத்தில் உயரழுத்த மின் கம்பி அறுந்து விழுந்ததில் 10-க்கும் மேற்பட் வீடுகளில் உள்ள மின் சாதன பொருட்கள் எரிந்து சேதமானது.

கன்னியாகுமரி மாவட்டம் முளகுமூடு அருகே கூனிமாவிளை கிராமம் . உள்ளது. சுமார் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் இந்த கிராமத்தில் இருக்கின்றன. மூலச்சல் துணை மின் நிலையத்தில் இருந்து உயர் மின்னழுத்த கம்பிகள் இந்த கிராமம் வழியாக செல்கிறது.

அந்த உயரழுத்த மின் கம்பி திடீரென நேற்று (மார்ச் 24 ) திடீரென்று அறுந்து விழுந்துள்ளது. இதனால் , வீட்டின் மின் இணைப்பு கம்பிகளில் உயர் மின்னழுத்தம் பாய்ந்ததால் 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த மின் மீட்டர்கள் , மின் சாதன பொருட்கள் எரிந்து போயின. ஒருவருக்கு லேசான காயமும் ஏற்பட்டுள்ளது.

தகவலறிந்து வந்த மின் வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். அப்போது, கிராம மக்கள் அவர்களை சுற்றி வளைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் இதனால், அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது . போலீசார் பொதுமக்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்