
கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி பகுதியை சேர்ந்தவர் தனுஷ் .39-வயது கட்டட தொழிலாளியான இவர் கடந்த 2015-ஆம் ஆண்டு 13-வயது சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இது குறித்து சிறுமியின் பெற்றோர் இரணியல் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் தனுஷ் மீது போக்சோ உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தேடிவந்தனர்.
ஆனால் , தனுஷ் போலீசார் தேடி வருவதை அறிந்து சவுதி அரேபியாவிற்கு சென்று தலைமறைவானர். இதனையடுத்து , இரணியல் போலீசார் தனுஷ் இந்தியாவிற்குள் நுழைந்தால் குடியுரிமை அதிகாரிகள் தகவல் தரும்படி லுக் அவுட் நோட்டீஸ் கொடுத்தனர்.
இந்த நிலையில் 10-வருடங்களுக்கு பின் சவுதி அரேபியாவில் இருந்து சொந்த ஊருக்கு வர முடிவு செய்துள்ளார் தனுஷ். இதற்காக, கொச்சி விமான நிலையத்தில் இறங்கிய தனுஷை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் பிடித்தனர்.
பின்னர், இரணியல் போலீருக்கு தகவல் கொடுத்தனர். இரணியல் போலீசார் கொச்சி சென்று தனுஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.