
கன்னியாகுமரி மாவட்டம் கோவளத்தில் ரூ. 6.65 கோடி செலவில் அமைக்கப்பட்ட மகளிர் தொழில் கூடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அழகுமீனா, சிட்கோ கண்காணிப்பாளர் மாரியம்மாள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.
தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத்தின் கீழ் செயல்படும் இந்த தொழில் கூடம் முழுவதுமாக பெண்களால் நடத்தப்படுகிறது. இதில் பழச்சாறு, தானிய வகை பிஸ்கட், தேன், ஊறுகாய், உலர் மீன், மூலிகை பொடிகள், தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு உணவுப்பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன .
இங்கு தயாரிக்கப்படும் பொருட்கள் வெளிமாவட்டம், வெளிமாநிலம், வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றன.