
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் நீதிமன்றத்தில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவதில் முன்னுரிமை கொடுத்து செயல்பட்டு வருகிறார். அதன் தொடர்ச்சியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பணிபுரியும் காவல் அதிகாரிகளின் புலன் விசாரணை திறனை மேம்படுத்தும் பயிற்சி முகாம் இன்று ( மார்ச் 26) நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் தொடங்கியது.
இந்நிகழ்வில் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், காவல் அதிகாரிகள் தங்கள் புலன் விசாரணை திறனை மேம்படுத்த வேண்டும் . காவல் நிலையங்களில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த பின்னர் குற்றவாளிகளுக்கு நீதிமன்ற விசாரணையில் தண்டனை பெற்று தரும் அளவிற்கு புலன் விசாரணை அமைய வேண்டும் என்றும் அறிவுறித்தினார்.
இந்த பயிற்சி ஒரு வார காலம் ஆயுதப்படை வளாகத்தில் வைத்து நடைபெறவுள்ளது. திறமை வாய்ந்த காவல்துறை அதிகாரிகள்,சட்ட வல்லுநர்கள், அறிவியல் நிபுணர்கள், தடயவியல் நிபுணர்கள், ஆகியோர் பயிற்சி அளிக்கவுள்ளனர். பயிற்சியில் காவல் ஆய்வாளர்கள் முதல் காவலர்கள் வரை கலந்துகொள்கின்றனர்.