நாகர்கோவில்: வடசேரி ஆம்னி பேருந்து நிலையத்தில் இலவச கழிப்பறை மூடப்படும் மர்மம் என்ன?

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி கிறிஸ்டோபர் பேருந்து நிலைய மேற்கு பக்கத்தில் இலவச கழிப்பறை உள்ளது. ஆனால், இரவு 9 மணிக்குள்ளாகவே சமீப நாட்களாக இந் கழிவறையை மூடி விடுகின்றனர்.

இதனால் , வடசேரி ஆம்னி பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகள் பலரும் வெளியூர்களுக்கு புறப்படும் நேரத்தில் இயற்கை உபாதையை கழிக்க முடியாமல் அவதிக்குள்ளாகிறார்கள். பெண் பயணிகள், முதியவர்கள் இயற்கை உபாதையை கழிக்க கழிவறையை தேடி அலைவது பரிதாபமாக உள்ளது.

கட்டண கழிப்பறைக்கு பயணிகள் செல்லும் வகையில், இலவச கழிப்பறையை முன்னரே மாநகராட்சி ஊழியர்கள் மூடிவிடுவதாக பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். இலவச கழிப்பறையை 24 மணி நேரமும் திறந்து வைக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.