பங்குனி உத்திர திருவிழா : கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்க கோரிக்கை

Panguni-Uttara-Festival-Request-to-declare-local-holiday-for-Kanyakumari-district

கன்னியாகுமரி மாவட்டம் பறக்கை சாஸ்தா ஸ்ரீ பாலாறு அய்யனார் திருக்கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குடும்பம் குடும்பமாக வருகை தந்து பொங்கலிட்டு முடி காணிக்கை செலுத்தி சுவாமியை வழிபட்டனர். நிகழ்ச்சியின் போது, 21 அடி உயரமுள்ள சங்கிலி பூதத்தாழ்வாருக்கு சிறப்பு அலங்கார தீபாதாரணை நடைபெற்றது. மேலும் பங்குனி உத்திர தினத்திற்கு,நெல்லை,தூத்துக்குடி,தென்காசி போன்ற மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளித்தது போன்று கன்னியாகுமரி மாவட்டத்துக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.