விடுமுறை நாட்களில் கண்ணாடி பாலம் மூடல் சுற்றுலா பயணிகள் அதிருப்தி

கன்னியாகுமரி சுற்றுலா மையமாக இருப்பதால் விடுமுறை நாட்களில் பயணிகள் அதிகம் வருகிறார்கள். இந்த நேரத்தில் கண்ணாடி பாலம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு இடையே உள்ள இந்த பாலம் சுற்றுலா பயணிகள் மத்தியில் பிரபலமானது.

ஏப்ரல் 15 முதல் 19 வரை பராமரிப்பு பணிக்காக பாலம் மூடப்படும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார்.

இந்த நாட்கள் விடுமுறையாக இருப்பதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என்பதால், அவர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.

சுற்றுலா ஆர்வலர்கள், பராமரிப்பு வேறு தேதிக்கு மாற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்துகின்றனர்.