
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் ஊராட்சி ஒன்றியத்தில் பழம் பெருமை வாய்ந்ததும் பல அறிஞர்களையும், அதிகாரிகளையும், தலைவர்களையும் பல்வேறு துறைகளில் உருவாக்கிய பெருமையும் உடைய மலவிளை அரசு தொடக்கப்பள்ளியின் நூற்றாண்டு விழா பல்வேறு நிகழ்ச்சிகளுடன் பள்ளி வளாகத்தில் முன்னாள், இந்நாள் மாணவர்களும் பொதுமக்களும் மற்றும் பள்ளி ஆசிரியர்களும் இணைந்து மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு விழாவில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நூற்றாண்டு விழா தீபத்தை ஏற்றி வைத்து விழாப் பேரூரையாற்றி விளையாட்டு போட்டி மற்றும் கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.
விஜய்வசந்த் எம்பி பேசும் போது :
இங்கு நடைபெற்ற நிகழ்ச்சியை பார்க்கும் போது உங்கள் குழந்தைகளுக்கு படிப்பு எவ்வளவு முக்கியமானதோ அதே போல் விளையாட்டு, கலை துறை மற்றும் பல்வேறு துறைகளில் உங்கள் குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும், ஆசிரியர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஆதரவுடன் இந்த பள்ளி நூற்றாண்டு விழா கொண்டாடப்படுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. கொரோனா காலத்திற்கு பிறகு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது அதற்கு காரணம் ஆசிரியர்கள் அதிக கவனம் எடுத்து அக்கறையுடன் மாணவர்களுக்கு பாடம் சொல்லி கொடுக்கும் முறை தான், மாணவர்கள் சோசியல் மீடியாக்களில் இப்போது அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள் தவறான வழியில் செல்வதை தடுத்து அவர்களது திறமையை அறிந்து, அதனை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் வெளிக்கொண்டு வர வேண்டும். என பேசினார்
முன்னதாக வருகை தந்த விஜய் வசந்துக்கு முன்னாள் மாணவர்கள் சங்கம்சார்பில் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர். விழாவில் மாணவர்களின் கண் கவர்கலை நிகழ்ச்சியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் திருவட்டார் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் வினுட்ராய், மற்றும் தலைமை ஆசிரியை திருமதி அமுதா, ஆசிரியர்கள், மாணவர்கள், நூற்றாண்டு விழாக்குழுவினர்கள், முன்னாள் மாணவர்கள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகம் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.