கன்னியாகுமரி : அம்பேத்கர் சிலைக்கு தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ மரியாதை

அம்பேத்கர் 134-வது பிறந்த நாளை முன்னிட்டு கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் எதிரேயுள்ள அம்பேத்கர் சிலைக்கு குமரி கிழக்கு மாவட்டக் கழக செயலாளரும் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய்சுந்தரம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் நாஞ்சில் முருகேசன் மற்றும் நாகர்கோவில் மாநகர வடக்கு மண்டல செயலாளர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்
ஸ்ரீலிஜா உட்பட ஏராளமான அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.