கன்னியாகுமரி : திராவிடர்கழகம் சார்பாக அம்பேத்கர் பிறந்த நாள் விழா

கன்னியாகுமரி மாவட்ட திராவிடர்கழகம் சார்பாக அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் விழா நாகர்கோவிலில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திராவிடர்கழக மாவட்டத் தலைவர் மா.மு. சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாவட்ட திராவிடர் கழக செயலாளர் கோ.வெற்றிவேந்தன் முன்னிலையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது நிகழ்ச்சியில் திராவிடர்கழக பொதுக்குழு உறுப்பினர் மு.இராசசேகர், திக மாவட்ட துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள், திராவிடர்கழக காப்பாளர் ம.தயாளன் பகுத்தறிவாளர்கழக மாவட்டத் தலைவர் உ.சிவதாணு,மாநகர திராவிடர்கழக தலைவர் ச.ச.கருணாநிதி தோவாளை ஒன்றிய திக தலைவர் மா. ஆறுமுகம், இலக்கிய அணி செயலாளர் பா. பொன்னுராசன், கன்னியாகுமரி கிளைக்கழக அமைப்பாளர் க.யுவான்ஸ் கோட்டாறு பகுதி தலைவர் ச.ச.மணிமேகலை, மு.குமரிச் செல்வன், பா.சு.முத்துவைரவன், ஆன்டர்சன் பெரியார் பற்றாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.