
நாகர்கோவில் என்.ஜி.ஓ காலனி அருகே வெள்ளாறன்விளை பகுதியில் கவின் டர் ஃப் என்ற கால்பந்து கிளப் சார்பில் மாநில அளவிலான 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கான ஐவர் கால்பந்தாட்ட போட்டி நடைபெற்றது. இதில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சார்ந்த பல்வேறு அணிகள் மற்றும் கேரள மாநிலம் மலப்புரம், திருவனந்தபுரம் மாவட்ட அணிகள் பங்கேற்றன. இந்த கால்பந்தாட்ட போட்டியினை குமரி வளரும் மக்கள் இயக்கம் நிறுவனத் தலைவர் அனி டைனிஸ் தொடங்கி வைத்தார். அதோடு, போட்டியில், வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கினார். போட்டியை ஏராளமானோர் கண்டு களித்தனர்.