திருக்குறள் திருவிழா : திருக்குறள் ஒண்சுடர் தூணில் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி

Thirukkural-Festival-Lighting-of-the-lamp-at-the-Thirukkural-Onesudar-Pillar

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் அறக்கட்டளை சார்பில் திருக்குறள் திருவிழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி, முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் அமைந்துள்ள திருக்குறள் ஒண்சுடர் தூணில் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் அகஸ்தீஸ்வரன் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு, கன்னியாகுமரி நகராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், குமரி மாவட்ட திருக்கோவில்களின அறங்காவலர்குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், ஆகியோர் சிறப்புவிருந்தினர்களாக கலந்து கொண்டு தீபம் ஏற்றிவைத்தனர். இந்த நிகழ்ச்சிக்கு உலக திருக்குறள் முற்றோதல் இயக்க பயிற்றுநர் பழனி தலைமை தாங்கினார் பயிற்றுநர் கோபிசிங் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி நகராட்சி முன்னாள் வார்டு கவுன்சிலர் தாமஸ், குமரி நகர தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் தாமஸ் ஷியாம், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் வினோத், மாவட்ட சிறுபான்மைபிரிவு துணை அமைப்பாளர் நிஷார் மற்றும் சுற்றுலா பயணிகள் உள்பட பலர் பங்கேற்றனர்