
கன்னியாகுமரி மாவட்டம் கோட்டாறு கம்பளம் பகுதியில் மதுரையை சேர்ந்த செல்வராஜ்( 30) என்பவர் குடும்பத்துடன் வசித்தார். இவர் சாட்டை அடித்துக் கொண்டு தர்மம் பெற்று வந்தார். அந்த வருமானத்தில் குடும்பத்தை நடத்தினார். நேற்று மாலை சுமார் 5.30 மணி அளவில் குடிபோதையில் வடிவீஸ்வரம் நீராளி கரை குளத்தில் குளிப்பதற்காக செல்வராஜ் இறங்கியுள்ளார். அப்போது, குளத்தில் மூழ்கி பலியானார். குளிக்க சென்றவர் இரவு 7 மணி ஆகியும் வீடு திரும்பவில்லை என்பதால் அவரது மனைவி மற்றும் உறவினர்கள் போலீசாருக்கு தகவல். தெரிவித்தனர். தொடர்ந்து, தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் இன்று அவரின் உடல் மீட்கப்பட்டது. பலியான செல்வராஜுக்கு
சாந்தி என்ற மனைவியும் இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.