கன்னியாகுமரி: தக்கலையில் மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை... பெண் உள்பட 5 பேர் சிக்கினர்

kanyakumari-5-people-including-a-woman-caught-selling-ganja-to-students-thackaley

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியில் மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த பெண் உள்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாகர்கோவில் அருகே உள்ள இரணியல் பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கு தோப்பு பகுதியை சேர்ந்த பிரதீஸ் குமார்(31), திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்த ஜிண்டோ என்பவரின் மனைவி பர்ஹத் லைலா(30), நாகர்கோவில் கோட்டார் பகுதியை சேர்ந்த ஷேக் சையது அலி பைசல்(30), இருளப்பபுரம் பகுதியை சேர்ந்த அனிஷ் சிட்டா(23), வெள்ளிமலை பிரகாஷ்(23) ஆகியோர் கஞ்சா விற்பனை செய்து வருவதாக போலீசுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தன. தகவலின் அடிப்படையில் போலீசார் கஞ்சா விற்பனை செய்தவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 9 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.