
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆசாரி பள்ளம் அரசு மருத்துவமனை கல்லூரியில் CT ஸ்கேன் மெஷின் பழுதடைந்துள்ளதால் நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் தினசரி சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களின் நோய்களின் தன்மையை துல்லியமாகக் கண்டறியும் CT ஸ்கேன் மெஷின் கடந்த எட்டு நாட்களாக பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் நோயாளிகளின் நோயின் தன்மையை அறிய மருத்துவர்கள் சிரமப்படுகிறார்கள். மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் பழுதடைந்து காணப்படும் CT ஸ்கேன் மெஷினை நோயாளியை கவனத்தில் கொண்டு விரைவில் சரி செய்ய நடவடிக்கை எடுக்க உறவினர்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.