
சர்வதேச சுற்றுலா நகர மான கன்னியாகுமரியில் வீடுகள், கடைகள், நிறுவனங்களில் இருந்து வெளி யேறும் சாக்கடை நீர் எந்தவித சுத்திகரிப்பும் இல்லாமல் நேரடியாக கடலில் கலக்கிறது. இதனால், சுற்றுச்சூழல் கடுமையாக மாசடைந்து வருகிறது.சாக்கடையுடன் மனித கழிவுகளும் கலந்து கடலை மாசுபடுத்தி எவருகிறது. இதன் காரணமாக, அந்த பகுதியில் குடியிருக்கும் குடியிருப்பு வாசிகள் மற்றும் மீனவர்கள் நோய் தாக்குதலுக்குள்ளாகின்றனர். கன்னியாகுமரி கடலில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டுமென கோரி அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட ஏராளமானோர் இன்று( மே 21) போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.