
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் பகுதி சேர்ந்தவர் திருநங்கை சமந்தா. இவர், தனது கைபையில் வைத்திருந்த 20 பவுன் நகை மற்றும் செல்போனை தவறவிட்டுள்ளார். இந்த பையை வேத நகரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான ஆண்ட்ரூசென் என்பவர் கண்டு எடுத்தார். பின்னர், ஒரு விநாடி கூட யோசிக்காமல் அந்த நகை பையை கோட்டார் காவல் நிலைய போலீசாரிடத்தில் ஒப்படைத்தார். போலீசார் நகையை தவறவிட்ட சமந்தாவை கண்டறிந்து காவல் நிலையத்து அழைத்தனர். பின்னர், அவர் தவறவிட்ட நகைகயை அவரிடத்தில் ஒப்படைத்தனர். நகையை கண்டெடுத்த ஒப்படைத்த ஆட்டோ டிரைவரின் நேர்மையை அனைவரும் வெகுவாக பாராட்டினர்.