சுற்றுச்சூழலை மாசுப்படுத்தாமல், பாதுகாக்க வேண்டும் - கன்னியாகுமரி எஸ்.பி. வேண்டுகோள்

the-environment-should-not-be-polluted-but-protected-kanyakumari-sp-appeals

உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு நாகர்கோவிலில் இலவச மரக்கன்று வழங்கும் விழா நடந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்ற கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் பேசியதாவது, 'கன்னியாகுமரி மாவட்டத்தில் நான்கு குறிஞ்சி, நெல்லை ,மருதம் , நெய்தல் என நான்கு வகை நிலங்கள் உள்ளன. இந்த அழகிய மாவட்டத்தை பாதுகாக்க இந்த மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியை நடத்துகின்ற இயற்கையோடு நாங்கள் அமைப்பை கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை சார்பில் வாழத்துகிறோம்

இந்த பூமியில் சுற்றுச்சூழலை பாதுகாப்பது தனி மனிதனின் பொறுப்பு. இந்த உலகம் எல்லாருக்கும் பொதுவானது. சக மனிதனாக இருந்தாலும் பிற உயிரினங்களாக இருந்தாலும் சரி எல்லாருக்கும் பொதுவானது . எனவே, சுற்றுசூழலை மாசுபடுத்தமால் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் . எங்கு சென்றாலும் பொதுமக்கள் பிளாஸ்டிகை பயன்படுத்தாமல் மஞ்சபையை பயன்படுத்த வேண்டும் .தேவையானவற்றை வாங்கி சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் 'என்று தெரிவித்தார்.