
கன்னியாகுமரி தொகுதியை தனித் தொகுதியாக அறிவிக்க வேண்டுமென்று தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் நாகர்கோவிலில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறது. உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்ற இறச்சகுளம் பகுதியை சேர்ந்த பாக்கியமணி(63) என்பவர் உண்ணாவிரத பந்தலில் மயக்கம் ஏற்பட்டு சுயநினைவின்றி கீழே விழுந்தார் .
உடனே , அங்கிருந்தவர்கள்ஆ ம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனர் . தொடர்ந்து, மயங்கிய நிலையிலிருந்த பெண்ணை ஆம்புலன்சில் ஏற்றி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதனால், உண்ணாவிரதப் பந்தலில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.