
கன்னியாகுமரி அருகே சிறுவனை கொன்ற வழக்கில் பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த 2022 ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கடியப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த ஜோகன் சிஜு (4) என்ற சிறுவனை காணவில்லை. பெற்றோர்கள் எங்கு தேடியும் சிறுவனை கண்டுபிடிக்க முடியவில்லை. பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் மணவாளக்குறிச்சி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
விசாரணையில் கடியப்பட்டினம் பகுதியை சேர்ந்த சகாய சரோபின் என்பவரின் மனைவி பாத்திமா(32), சிறுவனை கை கால்களை கட்டி கொலை செய்து பீரோவிற்குள் பூட்டி வைத்திருந்தை போலீசார் கண்டுபிடித்தனர். சிறுவன் அணிந்திருந்த தங்க நகைகளுக்காக இந்த கொலை நடந்துள்ளது.
இதையடுத்து பாத்திமா , அவரது கணவர் சகாய சரோபினை கைது செய்து போலீசார் விசாரித்தனர். சிறுவன் அணிந்திருந்த நகைகளும் மீட்கப்பட்டது. இந்த வழக்க
பத்மநாபபுரம் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று அளிக்கப்பட்ட தீர்ப்பில், பாத்திமாவுக்கு ஆயுள் தண்டனையும் அவரின் கணவர் சகாய சரோபினுக்கு3 ஆண்டுகள் தண்டனையும் விதிக்கப்பட்டது.