
கன்னியாகுமரி மாவட்டம் வடிவீஸ்வரம் பகுதியை சேர்ந்த ராஜகுமார் என்பவரது மகன் சக்திவேல் (25) . வழக்கறிஞரான இவர் உயர்ரக போதை பொருளான LSD ஸ்டாம்ப் - 0.42 மில்லி கிராம் வைத்திருந்துள்ளார். இதை அறிந்த கோட்டார் போலீசார், வழக்கறிஞர் சக்திவேலை கைது செய்தனர். போதை பொருளையும் பறிமுதல் செய்தனர். போதை பொருள் விற்க பயன்படுத்திய இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. போதை பொருள் விற்பனையில் ஈடுபடும் நபர்கள் யாராக இருந்தாலும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.