நாகர்கோவிலில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மாநாடு... எப்போது நடக்கிறது?

dravidar-kazhagam-conference-in-nagarkovil

நாகர்கோவிலில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மாநாடு நடத்த கன்னியாகுமரி மாவட்ட திராவிடர்கழகக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டதிராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் நாகர்கோவில், ஒழுகினசேரி பெரியார் மய்யத்தில் மாவட்டத்தலைவர் மா.மு.சுப்ரமணியம் தலைமையில் நடைபெற்றது. திராவிடர்கழக மாவட்டச்செயலாளர் கோ.வெற்றிவேந்தன் தொடக்கவுரையாற்றினார். திராவிடர்கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரன் சிறப்புரையாற்றினார்.

கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.செயக்குமார் சிறப்புரையாற்றினார்.மாவட்டதுணைத்தலைவர் ச.நல்லபெருமாள், பகுத்தறிவாளர்கழக மாவட்டத் தலைவர் உ. சிவதாணு, மாவட்டதுணைச்செயலாளர் எஸ்.அலெக்சாண்டர், பொதுக்குழு மு.இராசேகர், ஞா.பிரான்சிஸ்,கோட்டாறு பகுதித் தலைவர் ச.ச.மணிமேகலை திராவிடர்கழக குருந்தன்கோடு ஒன்றிய தலைவர் வில்லுக்குறி செல்லையா,ஏ. ச.காந்தி , பெனடிக் ஆகியோர் மாநாடு நடத்த நன்கொடை அளித்தனர்.

திராவிடர்கழக தோழர் க.யுவான்சுவின் தாயார் இ.இசபெல்லா, கடுக்கரை தோழர் ந.தமிழ் அரசனின் தந்தையார் நடராசன் ஆகியோருடைய மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டது. ஜூலை 11 ம் தேதி நாகர்கோவிலில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு, குடிஅரசு இதழ் நூற்றாண்டு மாநாடு நடத்த முடிவெடுக்கப்பட்டது. மாநாட்டில் பங்கேற்க வரும் திராவிடர்கழக தலைவர் கி.வீரமணிக்கு உற்சாக வரவேற்பு வழங்கவும் முடிவு செய்யப்பட்டது.