வெரிகோஸ் வெயின்... போலீசாருக்கு கன்னியாகுமரி எஸ்.பி செய்த விநோத வசதி

varicose-vein-treatment-for-kanyakumari-police

போலீசாருக்கு வெரிகோஸ் வெயின் வராமல் தடுக்கும் பொருட்டு உட்காரும் வசதியுடன் கூடிய அம்பெர்லா பேரிகார்ட் வழங்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலினுடன் காவலர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடந்த போது, பலரும் மனம் திறந்து பேசினர். அப்போது, கன்னியாகுமரி எஸ்.பி ஸ்டாலினிடத்தில் போலீசார் பலரும் வெரிகோஸ் வெயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியிருந்தனர். இதை தொடர்ந்து, மாவட்டத்தில் வெரிகோஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள போலீசாரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. போக்குவரத்து காவலர்கள் இந்த நோயினால் பெரும்பாலும் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. நீண்ட நேரம் நின்று கொண்டே வேலை செய்வதால், இந்த நோய் தாக்குகிறது.

இதனால் ,போலீசார் பணியின் போது போக்குவரத்து நெரிசல் குறைவாக இருக்கும் சமயத்தில் சற்று உட்கார்ந்து பணி செய்யும் வகையில் அம்பெர்லா பேரிகேட் மார்த்தாண்டம் உட்கோட்ட போக்குவரத்து காவலர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் போது, கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி ஸ்டாலின் மார்த்தாண்டம் உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நல்லசிவம் உதவி ஆய்வாளர் செல்லச்சாமி மற்றும் போக்குவரத்து பிரிவு காவலர்கள் உடன் இருந்தனர்.