
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் உதவி காவல் கண்காணிப்பாளர் லலித் குமார் தலைமையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஓடும் பேருந்தில் பயணம் செய்யும் வயதான பெண்களை குறி வைத்து பர்ஸ்.செயின். ஆகியவற்றை திருடும் கும்பலை கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுத்தனர். இதன் பயனாக ஓடும் பேருந்தில் பல வருடமாக திருட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மேல காந்தி நகர் பகுதியை சேர்ந்த விஜயா. மஞ்சு அரவிந்த். ஆகியோரை உதவி காவல் ஆய்வாளர் ஜெசி மேனகா தலைமையிலான போலீசார் இன்று கைது செய்தனர். கைதானவர்களிடத்தில் இருந்து 27பவுன் நகை ரூ. 2 .40 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. கைதானவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். கன்னியா குமரி மாவட்டத்தில் பெண்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்படும் போலீசாருக்கு மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.